புதுசா போஸ்ட் போட்டு ஆறு மாசத்துக்கும் மேல ஆச்சிங்க. நேரம் கெடைக்காததாலயும் வேலை பளு கூடிட்டதாலயும் இப்பல்லாம் அடிக்கடி எழுத முடியலீங்க.
ஆனாக்க சில பேர் .... இல்லல்ல.....பல பேர் தினமும் போஸ்ட் போடுறாய்ங்களே. அவிங்களால எல்லாம் எப்படித்தான் போட முடியுதோ. என்னத்த எழுதுறதுன்னு புரியலை. ரூம் போட்டு தான் யோசிக்கணும் போல தெரியுது.
யாராச்சும் எனக்கு எழுதுறதுக்கு சொல்லிக் கொடுங்கப்பா. இத கிறுக்குற நேரத்துல ஏதாவது நல்லதா எழுதி தொலைன்னு யாரோ சொல்றது என் காதுல லேசா விழுகுது. இதே வேலையா அலையனும் போல தெரியுதே.
ஷ்....அப்பப்பப்பா....இப்பவே கண்ணைக் கட்டுதே.
Wednesday, August 19, 2009
Wednesday, December 17, 2008
எல்லாவற்றிற்கும் ஆசைப்படு
ஆசையே மனிதனின் அழிவிற்கு காரணம் என்று பள்ளிப்பருவத்தில் படிக்கும் பொழுது எப்பொழுதோ காதால் கேட்ட ஞாபகம் உண்டு. ஆனால் இன்னாளில் ஒரு மகான் " எல்லாவற்றிற்கும் ஆசைப்படு " என்று சொன்னதாக ஒரு வாரப் பத்திரிக்கையில் படித்து விட்டு எனது நண்பன் ஒருவன் இன்ன விஷயம் என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட ஆரம்பித்தான்.
சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அவன் வெளி நாட்டு காருக்கு ஆசைப்பட்டு தெருவில் நின்று கொண்டிருந்த காரை தடவிப் பார்க்க அது அலறி காருக்கு உரிமையாளரையும் கூடவே போலீஸையும் அழைத்தது. அங்கிருந்து நகன்று ஆபீஸை நோக்கி போகும் பொழுது தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அழகான் பெண்களை பார்த்து இவள் போல எனக்கு மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டே போய் சைக்கிளை எதிரில் வந்து கொண்டிருந்த ஆட்டோவில் மோதி அடி வாங்கி இருக்கிறான்.
மதிய உணவு இடைவேளையில் எல்லோரும் அவரவர் டிபனை திறக்க இவன் மட்டும் மானேஜரைப் போல ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு தனது ஒரு வார சம்பளத்தை ஒரு வேளை உணவாக்கி நொந்து போய் வீட்டிற்கு வந்தால் வாடகை பாக்கியை வசூல் செய்ய வீட்டுக்காரர் வந்து நின்றிருந்தார். மறு நாள் சொந்த வீடு வேண்டி வங்கியில் லோனுக்கு அலைந்து திரிந்ததில் லோன் கிடைக்கவில்லை. கையிருப்பு தான் காணாமல் போயிருந்தது.
தனது நிலைமையை எண்ணி நொந்து என்னிடம் வந்து குமுறலை கொட்டித் தீர்த்தான். நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தேன். அந்த மகான் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று சொன்னாரே தவிர எந்தமனிதன் , எதற்கெல்லாம் , எவ்வாறு , எவ்வளவு தூரம் ஆசைப்படலாம் என்று சொன்னதை நீ கவனிக்கத் தவறியது உன் குற்றம் தான். இனி மேலாவது பார்த்து நடந்து கொள் என்று அவனுக்கு உபதேசம் சொல்லி அவனை தேற்றி அனுப்பி வைத்தேன்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின் இதே போல நாம் நிறையப் பேருக்கு அன்பாகவும் , அழகாகவும் உபதேசம் செய்தால் போதுமே நாமும் ஒரு மகான் ஆகி விடலாம். நமக்கு பின்னாலும் ஒரு கூட்டம் வரும். மாலை , மரியாதை , அரசியல்வாதிகளின் நட்பு , பணக்காரர்களின் டொனேஷன் என சகலவிதமான வசதிகளும் வந்து சேருமே என்று நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தேன்.
சீச்சீ........ நானும் " எல்லாவற்றிற்கும் ஆசைப்படுகிறேனோ "?

Saturday, October 18, 2008
அரிது........அரிது
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்று அந்தக் காலத்தில் யாரோ சொல்லி
விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் இவ்வுலகில் , இல்லை...... இல்லை.......
இந்தியாவில் மானிடராய் பிறப்பது எளிது. அதிலும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறப்பது
என்பது மிகவும் எளிது.
நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்து . நாட்டு நடப்பை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல்
வளர்ந்து . நாலு பேர் மெச்சிக் கொள்ளும் விதமாய் நல்ல மனிதன் என்று பெயர் எடுப்பது
தான் மிகவும் கடினம்.
இந்த அக்னி பரீட்சையில் தன்னைத் தானே உட்படுத்திக் கொண்டு உயிருடன்
வெளிவருவதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் படும்பாட்டை வார்த்தைகளில் வடிக்க
வேண்டும் என்றால் இந்த ஜென்மம் ஒன்று போதாது.
இவ்வளவு அரிதான மானிட ஜென்மம் எடுத்து கஷ்டப்படுவதை விட மானிடராய்
பிறக்காமல் இருப்பதே மிகவும் அரிதாகும்.

Tuesday, March 4, 2008
பொறுத்திரு மனமே
கடல் மணலையும், விண்மீன்களையும் எண்ண முடியுமா? கடல் அலைகளை கை கொண்டு நிறுத்த முடியுமா? காற்றை கண் கொண்டு பார்க்க இயலுமா? கற்பனையில் மட்டுமே வாழ முடியுமா? கனவை படம் பிடித்து பார்க்க இயலுமா? கண்ணாடியில் நாம் பார்க்க அதில் வேறு முகம் தெரியுமா? நெருப்பை மட்டுமே உணவாக கொள்ள முடியுமா? கடந்து போன நேரத்தை மீட்டு வர முடியுமா? இருட்டில் இருந்து கொண்டு படிக்க முடியுமா? வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை திரும்பி வரச் செய்ய முடியுமா? இவையெல்லாம் என்றைக்கு சாத்தியமாகிறதோ அன்றைக்கு ஒரு பெண்ணின் மன ஆழத்தையும், எண்ணங்களையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அது வரை மனமே உன்னல் முடிந்தால் பொறுத்திரு.
ஏக்கம்
ஏக்கம் என்பது வெகு நாள் ஆசை நிறைவேறாததன் வெளிப்பாடா? ஏக்கம் வந்து விட்டால் மனிதனின் தூக்கம் பறி போய் விடுமோ? தூக்கம் கெட்ட மனிதனின் மன ஊக்கம் குறைந்து விடுகிறதே. ஊக்கம் இல்லாமல் ஆக்கம் கெட்டுப் போய் நோக்கும் எதிலுமே மனம் லயிக்காமல் கடிவாளம் இல்லா குதிரை போல் மனம்காட்டிற்க்கும் மேட்டிற்க்கும் அலைகிறதே. அப்படி அலைவதால் மனமும் உடலும் நொந்து, நோயை முதலில் நாடி, அதன் பின் சாவை நாடும் முன் என் ஏக்கத்தைப் போக்கி தூக்கத்தை கொடு என்று காக்கும் கடவுளை வேண்டுவதையே வேலையாக்கிக் கொண்டிருக்கிறேன்.
ரெண்டே நிமிஷத்தில கதாநாயகன் ஆயிட்டம்ல
ரெண்டே நிமிஷத்தில கதாநாயகன் ஆயிட்டம்ல.ரொம்ப நாளைக்கு முன்னால பஞ்சாபிலும், ஜம்மு காஷ்மீரிலும் தீவிரவாதிகளின் கை ஓங்கி இருந்திச்சு. சென்ட்ரல் கவர்மென்ட்டால எதுவுமே செய்ய முடியல. அப்படிப்பட்ட நேரத்துல நான் ஜம்மு போயிருந்தேன். ஜம்முல வேலைய முடிச்சிக்கிட்டு டெல்லி கிளம்ப பார்த்தா பஸ் ட்ரெயின் எல்லாம் பேக் ஆயிடுச்சி. அப்பால இன்னா பண்ணேன்ணு கேட்கிறீகளா? கவர்மென்டு பஸ் ஒண்ணுல ஏறி நின்னுக்கிட்டே டெல்லி போயிடலாம்னு தைரியமா ஏறிட்டேன். பஸ்ல முக்கால்வாசி பேர் உக்கார்ந்திருந்தாந்க. நான் காலியாக இருந்த ஒரு ஸீட்டுக்குப் பக்கத்தில என் பெட்டியை வச்சிட்டு டாய்லெட்டுக்குப் போய் வந்திடலாமேன்னு போனேன். நான் கீழே இறங்கினதுமே அந்தக் காலியாக இருந்த ஸீட்டில உட்கார ஒரு ஆள் வந்திருக்காரு.என்னோட பெட்டியை காண்பிச்சி இது யாருதுன்னு கேட்க மற்ற பயணிகள்லாம் எங்களோடது இல்லைன்னு சொல்லி இருக்காங்க. அந்த பயணி உடனே கொஞ்சமும் யோசிக்காம கீழே போய் போலீஸை கூட்டி வந்து இந்த பெட்டி அனாதையா கெடக்கு, உள்ள பாம் இருந்தா இருக்கும்னு சொல்ல, போலீஸ்காரர் பயந்து போய், நான் பாம்ஸ்குவாடுக்கு போன் பண்றேன்னு பஸ்ஸை விட்டு கீழே இறங்க, பஸ்ல இருந்த பயணிங்க அத்தனை பேரும் வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாகவுமா அவங்கவங்க பெட்டியை எடுத்துக்கிட்டு கீழே இறங்கி பஸ்ஸை விட்டு தூரமா போய் நின்னுக்கிட்டாங்க. டாய்லெட்டுக்குப் போய் விட்டு வந்த நான் பஸ் காலியாக இருக்கிறத பார்த்து திரு திருன்னு பாண்டியராஜனை மாறி முழிச்சிக்கிட்டு கூட்டமா நின்னுக்கிட்டு இருந்த பயணிகள் பக்கத்தில போய் ஒரு பெருசுகிட்ட பஸ் ஏன் காலியாயிடுச்சு ரிப்பேரா? வேற பஸ் வருதான்னு ஒண்ணும் தெரியாம கேட்க, அதுக்கு அந்தப் பெருசு பஸ்க்கு உள்ளே ஒரு அநாதைப் பொணம்.. சீச்சீ.. பெட்டி கிடக்கு. அதுல பாம் இருக்கு என்றார். எனக்கு பகீர் என்றது. உடனே நான் பெருசுகிட்ட அய்யய்யோ என் சூட்கேஸும் உள்ள தான் இருக்கு எடுத்துக்கிட்டு வந்துடறேன் என்று சொல்லி விட்டு ஓடிப் போய் பஸ்ஸுக்குள் ஏறி என் ஸூட்கேஸை எடுத்துக்கிட்டு இறங்கினதும் அத்தனை பேரும் இது உன்னோடதா என்று ஒன்றாக கூச்சல் போட்டனர். அதுக்குள்ள போலீஸ்காரரும் வந்து பெட்டிய தெறந்து காமின்னார். நானும் பெட்டிய தெறந்து காண்பிச்சு என்னோட விசிட்டிங் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எல்லாத்தையும் காண்பிச்சு டெல்லிக்கு அவசரம போகணும்னு சொன்னேன். அதுக்குள்ள பஸ் டிரைவர், கண்டக்டர் எல்லாம் வந்து காச் மூச்சுன்னு கத்தி பிறகு பயணிகள் எல்லோரும் பஸ்ல உட்கார்ந்தாங்க. ஸீட் கிடைக்காம நின்னுக்கிட்டு போகணுமேன்னு நினைச்சிக்கிட்டு இருந்த எனக்கு என் பெட்டியில் பாம் கீம் எதுவும் இல்லைன்னு தெரிஞ்சதும் பயணிகள் எல்லாரும் சந்தோஷப்பட்டு அந்தப் பெருசு தலைமையில கண்டக்டர் கிட்டே பேசி எனக்கு கண்டக்டர் ஸீட்டை வாங்கி கொடுத்து உட்காரச் சொன்னாங்க. எனக்கு ஸீட்டை குடுத்துட்டு பாவம் கண்டக்டர் நின்னுக்கிட்டே வந்தாரு. பயணிகளுக்கு நல்ல டைம் பாஸ் ஆனதுல நான் முழு பஸ்லேயும் கதாநாயகனா ஆயிட்டேன்ல. அப்புறமா மிட்வேயில நான் சாப்பிடும் போது கண்டக்டருக்கு என் காசுல சாப்பாடும் டீயும் வாங்கிக் கொடுத்தது தனிக்கதை.
பின் குறிப்பு :- இந்த போஸ்ட் அன்புடன் அருணாவின் ப்ளாக்க ரெகுலர படிச்சதன் பாதிப்புங்கோ. மனசுல உறங்கிக் கெடந்த சம்பவத்தை வார்த்தையருவியோ கொட்ட வச்சதுக்கு அருணாம்மாவுக்கு நன்றிங்கோ..
பின் குறிப்பு :- இந்த போஸ்ட் அன்புடன் அருணாவின் ப்ளாக்க ரெகுலர படிச்சதன் பாதிப்புங்கோ. மனசுல உறங்கிக் கெடந்த சம்பவத்தை வார்த்தையருவியோ கொட்ட வச்சதுக்கு அருணாம்மாவுக்கு நன்றிங்கோ..
Monday, March 3, 2008
மறு பக்கம்
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல இவ்வுலகில் எந்தவொரு விஷயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. அதையே நாம் மறுபக்கம் என்கிறோம். வெற்றி தோல்வி, உண்டு இல்லை, இன்பம் துன்பம் இப்படி எல்லாவற்றிற்கும் மறுபக்கம் என்று ஒன்று இருக்கிறது. பொதுவாக நம்மில் பலர்(என்னையும் சேர்த்து) எதிலும் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துக்கொண்டு அது தான் முடிவு இதைத் தவிர வேறு வழி இல்லை என் நினைத்து விடுகிறோம். எல்லா விஷயத்திலும் அந்த மறுபக்கத்தை எப்படிப் பார்ப்பது என்பது கம்பசூத்திரமாகத் தான் தெரிகிறது.இன்றைய இயந்திர வாழ்க்கையில் மனிதன் தினம் தினம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் மறுபக்கத்தைத் தேடி அலசி ஆராய ஆரம்பித்தால் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதாதே. அப்படியென்றால் இதற்கு என்ன தான் வழி. மறு பக்கத்தை எளிதில் பார்த்து முடிவு எடுக்க யாரேனும் உதவுங்களேன் ப்ளீஸ்.

Subscribe to:
Posts (Atom)