Tuesday, February 19, 2008

ஒரு விண்ணப்பம்
இதைப் படிக்கப் போகும் நல்ல உள்ளங்களுக்கு என் முதல் வணக்கம். முடியாது, இல்லை போன்ற
சொற்களை நமது வாழ்க்கையில் இருந்து அகற்ற முடியும் இதை படித்தால்.
ஒரு நிகழ்வு
ஒரு சிறுவன் தனது 11 வது வயதில் கிணற்றில் குளிக்கப் போய் விபத்து ஏற்பட்டு தனது உடலில் இடுப்புக்குக் கீழே எந்த ஒரு உண்ர்ச்சியும் இல்லாமல் படுத்த படுக்கையாய் கடந்த 25 வருடங்களாக வாழ்க்கையுடன் போராடி நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறான். அவன் பெயர் அந்தோணி முத்து. அவனுடைய தந்தை உயிருடன் இல்லை. தாயாரும் கை கால்களை அசைக்க முடியாமல் படுக்கையில் கிடக்க இவன் அசைய, எழுந்து உட்கார, புரண்டு படுக்க என எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்து இருக்கும் இந்த வேளையில் அவனுடன் பிறந்தவர்கள் அவனை கனிவுடன் கவனித்து வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையிலும் இன்று 36 வயதாகும் அந்த இளைஞன் கணிணி, இசை ஆகிய துறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு சுயமாக சம்பாதித்து தானும் வாழ்ந்து ,தன்னைப் போலவே இவ்வுலகில் இருக்கும் மற்றவர்களுக்கும் உதவ விரும்புகிறான்.
அந்த நிகழ்வின் பின்னணி
கடவுள் தான் படைத்த மனித ஜீவராசிகள் தங்களது மூளையை உபயோகித்து பலப்பல புதுமைகளை கண்டுபிடித்து இயந்திரத்தைவிட அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
ஆனல் மனிதர்களிடம் இரக்க குணம் எவ்வளவு இருக்கிறது என்று அவரால் கணக்கிட முடியவில்லை.
எனவே மேலே கூறிய அந்த இளைஞனைப் படைத்து அவனுக்கு அப்படி ஒரு கஷ்டத்தையும் கொடுத்து மனிதர்களின் இரக்க குணத்திற்கு பரீட்சை வைத்திருக்கிறான். கடவுள் வைத்த தேர்வு
கடவுள் வைத்த அந்த தேர்வை எழுத மனிதனாய் பிறந்த யாருக்கும் எந்தத் தகுதியும், திறமையும், வயதும்,மதமும் தேவையில்லை.இரக்க குணம் படைத்த அனைவருமே இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்தத் தேர்வின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே முதல் மார்க் தான். தோல்வி என்பதே கிடையாது.வாருங்கள் நல்ல இதயம் கொண்ட நாம் அனைவரும் இந்தத் தேர்வில் கலந்து கொள்வோம். நாம் எழுதப்போகும் இந்தத் தேர்வைப் பார்த்து விட்டு கடவுள் மனிதர்களின் இரக்க குணத்தை எடைபோட இனிமேலும் இன்னொரு அந்தோணியை படைக்காமல் இருக்கட்டும்.
அந்த இளைஞனின் முகவரி
எஸ்.அந்தோணி முத்து
C/0.ஜே.தர்மராஜ்
5/96,சேரன் தெரு, கே.கே. நகர்,பம்மாது குளம்,ரெட் கில்ஸ்,சென்னை- 52
போன்: 26323185 மொபைல்: 9444496600
இ-மெயில்: அந்தோணிமுத்து@ ஜி.மெயில்.காம்.


பின்குறிப்பு
இரக்க குணம் உள்ளவர்கள் இல்லாமை, இயலாமை காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் படித்த இந்த நிகழ்வை பலரும் படிக்க உதவி செய்தாலே போதும். அது கூட கோடி கோடி புண்ணியம் தான்.

Monday, February 18, 2008

ஆசை
கடவுளுக்கு கண்ணாடி மாட்டி விட ஆசை. குடையை எடுத்ததும் மழை வர ஆசை. குளிர்ந்த சூரிய வெளிச்சத்தை அனுபவிக்க ஆசை. ஒரேயொரு தீக்குச்சி உரசி குளிரை விரட்ட ஆசை. சைக்கிளில் ரிவர்ஸ் கியர் மாட்ட ஆசை. கண்களை மூடினாலும் காட்சி தெரிய ஆசை. திருமணம் செய்த புதிதில் காட்டும் அன்பை மனைவி கணவனிடம் கடைசி வரை காட்ட ஆசை. வாழ்வில் நடந்த பல இனிய விஷயங்களைரீவைண்டு செய்து மீண்டுமொரு முறை அனுபவிக்க ஆசை. இறக்கப் போகும் நாளை தெரிந்து கொள்ள ஆசை. அதற்குள் வாழ்க்கையை முழூவதுமாக வாழ்ந்து விட ஆசை.
கைம்மாறு
மனிதனாய் பிறந்த அனைவரும் தனக்கு யாராவது நல்லது செய்தால் அதற்குகைம்மாறாக அவர்களுக்கு ஏதாவது பிரதிஉபகாரம் செய்வது வழக்கம்.என் வாழ்வில் அப்படி எதுவும் எனக்கு நடக்காத பொழுது நல்லது நடக்க நீ கடவுளை பிரார்த்தனை செய் உடனே நல்லது நடக்கும் என்றனர்.எனக்கு கடவுள் ஏதாவது நல்லதைச் செய்தால் தானே நான் கடவுளைபிரார்த்தனை செய்து கைம்மாறு செய்ய முடியும்.கடவுளின் செயலுக்காக நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்க என் பிரார்த்தனைக்காககடவுளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது.இதில் யார் மீது தவறு இருக்கிறது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்