நல்ல நேரம்
என்ன செய்ய ஆரம்பித்தாலும் இன்று நல்ல நேரம் எது என்று பார்க்க ஆரம்பிப்பவர்களைகண்டு நான் வியப்படைவேன். எதற்காக இந்த நல்ல நேரம் பார்க்கும் பழக்கம். நாம் தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து வெளியேற நல்ல நேரம் பார்ப்பதுண்டா?பசி காதை அடைக்கும் பொழுது எதிரில் இருக்கும் உணவை சாப்பிட நல்ல நேரம்பார்ப்பதுண்டா? கொத்த வரும் பாம்பைக் கண்டு ஓடுவதற்கு நல்ல நேரம் பார்ப்பதுண்டா?பிறகெதற்கு ம்ற்ற வேலைகளில் மட்டும் நல்ல நேரம் , நல்ல நாள் என்று பார்த்துக்கொண்டு நாட்களையும் நேரத்தையும் கடத்தி வீணடிக்க வேண்டும். எந்த நாளும், எந்த நேரமும் நல்லதே. நாம் மனதில் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய நினைக்கும் பொழுது. சரி தானே
Saturday, February 16, 2008
பழிக்குப் பழி
வாகனங்களும் தொழிற்சாலைகளும் போட்டியிட்டு சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் பொழுதும்குடிக்கவும் குளிக்கவும் உபயோகமற்றதாக தண்ணீரை அசுத்தப்படுத்தும் பொழுதும்மரங்களை வெட்டிச் சாய்த்து மணல் வெளியாக்கி வனவிலங்குகளை வேட்டையாடும் பொழுதும்இயற்கையைப் பார்த்து ஏளனமாக சிரிக்கும் மனித இனத்தை சற்றே கோபத்துடன்சுனாமியாகவும், புயலாகவும், வெள்ளமாகவும் பயமுறுத்தும் இயற்கையை மனிதன்கரித்துக் கொட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வினையை விதைத்தால் வினையைஅறுத்துத்தான் தீர வேண்டும்.

Friday, February 15, 2008
பணம் --- பெண்
அன்று முதல் இன்று வரை பணத்திற்கும் பெண்ணிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்து வருகின்றன.பெண்ணை லஷ்மி என்றும் பணத்தை மகாலஷ்மி என்றும் சொல்வர். நிறைய பணத்தை சேர்க்க நினைத்தவனுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை நேசித்தவனுக்கும் வாழ்க்கையில் என்றுமே நிம்மதி இருந்ததில்லை.பணமும் பெண்ணும் வாழ்க்கையில் வருவதும் தெரியாது போவதும் தெரியாது.வாழ்க்கையின் கடைசி வரை வருவதற்கு பணத்திற்க்கும் சரி பெண்ணிற்கும் சரிஉத்தரவாதம் கிடையாது.பணத்தையும் பெண்ணையும் வெறுத்து மறந்தவனை ஈஷ்வரன் என்கின்றனர்.இரண்டையும் கட்டிக் காத்து வாழ்பவனை கோடீஷ்வரன் என்கின்றனர்.எந்த ஒரு ஆணின் வாழ்க்கையிலும் இந்த இரண்டில் எது இல்லையென்றாலும்அவனது வாழ்வை நரகம் என்கின்றனர்.

Subscribe to:
Posts (Atom)