Saturday, March 1, 2008

இரண்டு மனம்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்று பாடினான் ஒரு கவிஞன். மனம் என்பது மூளைக்குக் கட்டுப்பட்டதா? அல்லது தனித்து இயங்கக் கூடியதா? சில நேரங்களில் மனம் நமது மூளையின் கட்டளையைக் கூட ஏற்க மறுக்கிறதே! நினைக்கவும் மறக்கவும் தெரிந்த இந்த மனத்தின் தராசுத் தட்டுக்கள் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும். என் மனத்தின் நினைக்கும் தட்டு எடையே இல்லாமல் உயர்ந்தும், மறக்கும் தட்டு அதிக எடையுடன் தாழ்ந்தும் இருக்கிறதே. நினைக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் வழுகி விடுகின்றன. மறக்க நினைக்கும் சில விஷயங்கள் பாறாங்கல்லாய் சம்மணம் போட்டு அமர்ந்து அழுத்துகின்றதே. தராசுத் தட்டுக்களை சரிசமப்படுத்த முடியாது என்பதால் தானோ என்னவோ ஒரு மனதை வைத்து உயிர் வாழ்வது கடினம் என்று இரண்டு மனம் கேட்டு இருக்கின்றானோ?.

1 comment:

Anonymous said...

அப்படி மட்டும் இரண்டு மனம் இருந்து விட்டால் எவ்வளவோ விஷயங்கள் எளிதாக ஆகி விடுமே!
அன்புடன் அருணா