மலர் அஞ்சலி
பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்கு நான் செலுத்தும் மலர் அஞ்சலி இது.அந்தக் காலம் முதல் நேற்று வரை தமிழ் வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவர் எழுதாத விஷயமே இல்லை எனலாம். பொரியியல், புதுக்கவிதை, மரபுக்கவிதை, தொடர்கதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி-பதில், நாடகம், சினிமா, சரித்திரம் என அனைத்துத் துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். அவர் கணிணியைப் பற்றி எளிய நடையில் சொல்லிக் கொடுத்ததை கைக்குழந்தை கூட புரிந்து கொள்ளும். அவரது சரளமான எழுத்து நடை பாமரனையும் படிக்கத் தூண்டும். அவரது கதை, கட்டுரை, கவிதைகளைப் படித்து என் இளம் பிராயத்தில் நானும் புதுக் கவிதைகள் பல எழுதி இருக்கிறேன். அவரது கணேஷ் வசந்த் பாத்திரங்கள் காலத்தால் அழியாதவை. இப்படி இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். அவரது புகழ் நிலைத்து நிற்கும் தமிழ் இனம் உள்ளவரை.
Friday, February 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உண்மைதான்! நான் கம்ப்யுட்டர் மேல் காதல் கொள்ள ஆரம்பித்ததே அவருடைய எழுத்துக்களால்தான்!
அன்புடன் அருணா
Please take off this word verification.....
Post a Comment