Thursday, February 28, 2008

இனியொரு உலகம் இறைவனால் படைக்கப்பட்ட இந்த உலகத்தை மனிதன் தாறுமாறாக மாற்றி அமைத்து விட்டதால் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வேறு ஒரு புதிய உலகைப் படைக்க வேண்டி. அந்தப் புது உலகத்தில் வற்றாத நதியும், ஆறும், நீர்வீழ்ச்சியும் வேண்டும். வெட்ட முடியாத மரம் செடி கொடிகள் வேண்டும். என்றுமே வாடாத மலர்கள் வேண்டும். மாசு இல்லாத காற்று வேண்டும். மனிதனை மனிதன் நேசிக்கும் நல்ல இதயம் வேண்டும். அராஜகப் போக்குடன் அரசியல் செய்பவர்கள் இல்லாமல் அந்தந்த ஊரில் வசிப்பவர்கள் அவர்களுக்குள் வரிவசூல் செய்து அந்தந்த ஊரில் அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஆணுக்குப் பெண் அடிமை என்றில்லாமல் ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். அடிக்கும் கைகள் இல்லாமல் அணைக்கும் கைகள் மட்டுமே வேண்டும். எங்கும் எதிலும் இன்பமே வேண்டும். மனிதர்கள் நோய் நொடி இல்லாமல் இறக்கும் பொழுதும் சிரிக்க வேண்டும்.

1 comment:

Anonymous said...

நாமெல்லாம் பொல்லாதவர்கள் குண்டுத் தொப்பை!...இப்பிடி நீங்க கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் நாம் இறைவனையே நீ யார்னு கேட்டு விடுவோம்!தெரியுமா??
அன்புடன் அருணா