Saturday, February 16, 2008

நல்ல நேரம்
என்ன செய்ய ஆரம்பித்தாலும் இன்று நல்ல நேரம் எது என்று பார்க்க ஆரம்பிப்பவர்களைகண்டு நான் வியப்படைவேன். எதற்காக இந்த நல்ல நேரம் பார்க்கும் பழக்கம். நாம் தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து வெளியேற நல்ல நேரம் பார்ப்பதுண்டா?பசி காதை அடைக்கும் பொழுது எதிரில் இருக்கும் உணவை சாப்பிட நல்ல நேரம்பார்ப்பதுண்டா? கொத்த வரும் பாம்பைக் கண்டு ஓடுவதற்கு நல்ல நேரம் பார்ப்பதுண்டா?பிறகெதற்கு ம்ற்ற வேலைகளில் மட்டும் நல்ல நேரம் , நல்ல நாள் என்று பார்த்துக்கொண்டு நாட்களையும் நேரத்தையும் கடத்தி வீணடிக்க வேண்டும். எந்த நாளும், எந்த நேரமும் நல்லதே. நாம் மனதில் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய நினைக்கும் பொழுது. சரி தானே

1 comment:

Anonymous said...

//எந்த நாளும், எந்த நேரமும் நல்லதே. நாம் மனதில் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய நினைக்கும் பொழுது. சரி தானே//

உங்களுக்குத் தெரிகிறது...எனக்குத் தெரிகிறது.. ஆனால் ஊருக்குத் தெரிய மாட்டேன் என்கிறதே? சோம்பேறிகளின் நொண்டிச் சாக்குதான் இந்த நல்ல நாள் பார்க்கிறது எல்லாம்....
அன்புடன் அருணா