கைம்மாறு
மனிதனாய் பிறந்த அனைவரும் தனக்கு யாராவது நல்லது செய்தால் அதற்குகைம்மாறாக அவர்களுக்கு ஏதாவது பிரதிஉபகாரம் செய்வது வழக்கம்.என் வாழ்வில் அப்படி எதுவும் எனக்கு நடக்காத பொழுது நல்லது நடக்க நீ கடவுளை பிரார்த்தனை செய் உடனே நல்லது நடக்கும் என்றனர்.எனக்கு கடவுள் ஏதாவது நல்லதைச் செய்தால் தானே நான் கடவுளைபிரார்த்தனை செய்து கைம்மாறு செய்ய முடியும்.கடவுளின் செயலுக்காக நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்க என் பிரார்த்தனைக்காககடவுளும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது.இதில் யார் மீது தவறு இருக்கிறது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்
Monday, February 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கடவுளுக்கு நம்ம கைம்மாறு செய்வது என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் கடவுளைக் கேலி செய்வது போன்றது...கடவுள்கிட்டேருந்து எடுத்து அவருக்கேவா?
என்னைப் பொறுத்தவரையில் கடவுளுக்குத் தெரியாததா நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று?கடவுள் பிரார்த்தனையைக் கூட எதிர்பார்ப்பதில்லை. அது கூட மனிதன் தன் மன அமைதிக்காக செய்வதுதான்!!
அன்புடன் அருணா
Post a Comment